இயற்கை திருத்தி அமைக்கப்பட்டது

நேற்றுவரை வானுயர வளர்ந்த மரங்கள்
nilal தரும் மா மரங்கள்
காயும் கனியும் தரும் மரங்கள்
நமக்கு உயிராம் பிராண வாயு தந்து
கரியமில வாயுவை உள்வாங்கி சேர்க்கும் மரங்கள்
malaitharum மேகங்களுக்கு மரங்கள் ….
இதோ, இதோ, பாவம் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன …..
வாயில்லா உயிரினம் தாவரம் பாவம் …
காலிருந்தால் ஒருவேளை தன்னை சாய்க்க
வருவாரைக்கண்டு ஓடி இருக்குமோ ?
இப்படித்தான் உயிருள்ள ஆனால் பேசமுடியா
விலங்கினங்கள்… ஆடு, மாடு, கோழி முதலியன
தன உணவிற்கு மனிதன் கொலை செய்கிறான்
கத்தி கதறி அருள் கேட்கும் இவைகளுக்கு
கிடைப்பதோ தலையில் வெட்டு உடல் இரண்டாய்ப்போக
இந்த மனிதனின் செயல்கள் அத்தனையும்
இயற்கைக்கு எதிராய் அவன் நடத்தும் செயல்கள்
இயற்கை மனிதனுக்கு நண்பன்
மனிதன் இயற்கைக்கு எதிரியா …?
இல்லை இன்னும் இயற்கையை அவன்
புரிந்துகொள்ளவில்லையா ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (6-Jul-19, 2:05 pm)
பார்வை : 441

மேலே