காதல் வலி 70

அவளின் பாதம்
பாதமல்ல பாதாம்

அவளின்
கை கையல்ல
பொய்கை

அவளின்
மெய் மெய்யல்ல
உண்மை

கண்கள்
கண்களல்ல
கன்கள்

செவிகள்
செவிகள் அல்ல
கவிகள்

கூந்தல் அல்ல
என் மன
இருள் நீக்கும்
ராந்தல்

வண்ணம் பூசிய
நகம் நகமல்ல
என் மனம் கொத்திய
நாகம்

அவளின் விரல்
நெஞ்சை ஆக்கியது
வீரல்

கன்னம்
கன்னமல்ல
எனை மயக்கும்
கானம்

அவளைப்
பார்த்த பிறகு
போதியில்லாமல்
எனக்குக் கிட்டியது ஞானம்

எழுதியவர் : புதுவைக் குமார் (7-Jul-19, 12:06 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 53

மேலே