மழை, நான், தேனீர் மற்றும் பக்கோடா

*பூமிக் காதலியின்
அருமந்த அழகை ஆசைதீர
மழைக்கரம் நீட்டி
அணைத்திடும்
ஆகாயக் காதலன்…

*பூமிக் காதலியின்
கன்னக் குழிகள் தன்னில்
மழைக்காதல் ஊற்றி
நிரப்பிடும்
ஆகாயக் காதலன்…

*பூமிக் காதலியின்
இதய அறையில் இடம்பெற
மழைஈரங்கள் சிந்தி
ஈர்த்திடும்
ஆகாயக் காதலன்…

*பூமிக் காதலியின்
தேகம் பச்சைப்பட்டு உடுத்திட
வெள்ளி மழைச்சரிகை
தந்திடும்
ஆகாயக் காதலன்…

*பூமிக் காதலியின்
உதட்டின் சிறு வெடிப்பினை
மழைமுத்தம் கொடுத்து
நனைத்திடும்
ஆகாயக் காதலன்…

இந்த
ரம்மியமான
ரகசியக் காதலை
ரசித்திடும் -- நான்,
தேனீர் மற்றும் பக்கோடா சகிதமா…

எழுதியவர் : காதம்பரி (7-Jul-19, 12:43 pm)
சேர்த்தது : காதம்பரி
பார்வை : 511

மேலே