ஞாயிறு விடுமுறை

🥃 ஞாயிறு விடுமுறை 🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃
அதிகாலை வெட்டுப்படும்
ஆட்டின் சத்தம்
விடிந்தவுடன் பலர் வீட்டு
பையில் இரத்தம்...

மதிய வேளை மதுக்கடையில்
மனிதர் மொத்தம்
திரும்பம்போது எறும்பு போடும்
இரும்பின் சத்தம்...

அடுத்து.....

வண்டியோடு மண்டைபோடும்
ரோட்டில் முத்தம்
எதிர்பார்த்த ஆம்பலன்ஸ்ன்
அலரல் சத்தம்...

மருத்துவரின் கருவி எல்லாம் சுத்தும் முத்தும்
விடிவதற்க்குள் காலியாகும்
மொத்த சொத்தும்...

முடமாவா ? ஜடமாவா ?
அவனின் சித்தம்
நிகழ்கின்ற நிகழ்வெல்லாம்
யாரின் குத்தம்...

ஆட்சியாளர்க்கு கிடைக்க வேண்டும் சொத்தும் பத்தும்
ஆண்டவனோடு ஒன்று சேர்ந்து
நடத்தும் யுத்தம்..

ஞாயிறு என்ன விடுமுறையா. இல்லை இல்லை

அதுவும் ஒரு மிகச் சிறந்த வேலைநாளே.....

க.செல்வராசு.......

🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃

எழுதியவர் : க.செல்வராசு (7-Jul-19, 8:14 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : gnayiru vidumurai
பார்வை : 214

மேலே