நண்பன்

நண்பன் 🤝💪

வானம் போல்
உயர்ந்த எண்ணம்
கொண்டவன்.
பூமி போல்
பறந்த உள்ளம்
கொண்டவன்.
அருவியன அன்பை
பொழிபவன்.
சூரியனை போல்
ஒளி தருபவன்.

கர்ணனை போல் நட்பை
உயிராய் மதிப்பவன்.
கிருஷ்ணனை போல் நட்பை
ஏற்ற தாழ்வு இன்றி
ஆராதனை செய்பவன்.
இராமனை போல்
இனம் பாராட்டாமல்
நட்பை கொண்டாடுபவன்.

பிரச்சனை என்று வந்துவிட்டால் தோலாடுதோல் வந்து நிற்பவன்💪
சிக்கலை சீராக்கி
சிரிக்க வைப்பவன்😀
குறிப்பறிந்து கேட்காமலேயே உதவி செய்பவன்🤝
சொந்தம், பந்தம் இதற்கெல்லாம் அப்பார்பட்டவன்👌
இயற்கை போல் என்றும் நிலையானவன்🙏🏽
என்றும் என் மனதில்
இமயம் போல்
உயர்ந்து நிற்பவன்.
அவன் என்
அன்பு நண்பண் 🤝🙏🏽💪.

- பாலு.

எழுதியவர் : பாலு (8-Jul-19, 2:53 pm)
Tanglish : nanban
பார்வை : 1479

மேலே