ஏக்கம்

நினைவெனும் பறவை நித்திரையில் சிறகடிக்க...!!!
உன் ரோஜா இதழ் நான் சுவைக்க...!!!
நாவொன்று நாடுதம்மா நாள்தோறும்...!!!
மழைக்காலத்தில் உன் மார்போடு நான் மலர்ந்திருக்க...!!!
மனமும் இங்கே ஏங்குதம்மா - மானே...!!
மாலை மங்கும் நேரம் மான்விழியில் நான் மயங்கிட...!!!
குளிர்காலத்தில் அனல் தேடும் அங்கங்கள்
அள்ளி அணைத்த அந்த நிமிடங்கள்...!!!
நெஞ்சினிலே நீருற்றாய் நின்றிட...!!!
சித்தத்தில் நித்தம் உன் நினைவாலே...!!!
நிமிடங்களை கடக்கின்றேன் கவலையோடு...!!!
அற்ப சுகங்கள் ஆயிரம் அலைபேசியில் இருந்தும்...!!!
அன்பே உன்னை அரவணைக்கும் அந்த நொடிகளுக்காக
ஆவலும் கூடுதம்மா...!!!
கொஞ்சி விளையாட குழந்தை மனமும் ஏங்குதம்மா...!!!

எழுதியவர் : தஷ்வின் (8-Jul-19, 7:08 pm)
சேர்த்தது : தஷ்வின்
Tanglish : aekkam
பார்வை : 1422

மேலே