பனைப் பெண்

கருமை நிறம் கொண்ட
மெலிந்த தேகத்தாள்
பச்சை நிற கூந்தல் கொண்டு
கோடை நில குளிர்மை
பானத்தைக் கொடையாகக்
கொடுத்து எம் தேகமெல்லாம்
குளிரச் செய்வாள்!

வயல் காடு வரப்பெல்லாம்
வனப்போடு வாழ்ந்திருந்த
வறண்ட நிலத்தை வளமையாக்கும்
அந்தப் பனைப் பெண்ணின்
தேகமெல்லாம் தேய்ந்து போய்
வாழ்க்கையெல்லாம் வெறுமையாகிப்
போனதையே என் சொல்வேன்!!

இனிமேலும் விழித்திடா விட்டால்
நம் நிலத்தின் அடையாளமவள்
எங்கும் இலாமல் போய் விடுவாள்
எழுமின் எழுமின் எம்மினமே
ஏர் பிடித்து நீர்ப் பாய்ச்சி நிலம் செழிக்க
கருமை நிறத் தேகத்தாள்
பனைப் பெண்ணும் வேண்டியவளே!!!

எழுதியவர் : தமிழ் மைந்தன் - ரிச்சர்டு (8-Jul-19, 9:09 pm)
பார்வை : 66

மேலே