கெண்டை மீன்கள் கண்டபடி எகிர

வண்ணார் அனைவரும் துணி துவைக்க
வால் நாரைகள் சேர்ந்து மீன்களைத் தேட
மண் உருட்டும் வண்டுகள் சேர்ந்து
சேற்றை குண்டாக்கி உருட்டி வர

தலைப்பிரட்டை தாவியாட
தட்டான் எல்லாம் தலைமேல் பறக்க
நீரின் மேல் அலை நெகிழ்சியில் ஆட
நீர்க்குருவிகள் நெடு நீச்சல் அடிக்க

கெண்டை மீன்கள் கண்டபடி எகிர - அதைக்
கண்ட மீன்கொத்தி கவ்விப்பறக்க
கிளிஞ்சல் எல்லாம் கரை நோக்கி ஒதுங்க
நண்டுகள் வலையில் கொண்டாட்டம் பழக

நடந்தன இவையெல்லாம் ஊரில் ஏரி இருந்த போது
நாகரீகம் பெற்ற நஞ்சு மனிதனின் நாசக்கார சிந்தை
நமக்கது வேண்டும் என கபளிகரம் பண்ணதால்
நாவறண்ட ஏரி நாகரீக குப்பையால் நன்றாய் நிறையுது
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (10-Jul-19, 8:37 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 49

மேலே