குண்டு நெல்லு குத்தரிசி

குண்டு நெல்லைச் சேர்த்து வைத்தேன்
குத்த உரலைப் பார்த்திருந்தேன்

கொல்லைப்புற பக்கத்திலே
கல்லு உரல் கடந்ததம்மா

தோதான இடத்தினிலே
தூக்கி அதைப் போட்டு வைத்து

தூலமான உலக்கையை நான்
துவளாமல் எடுத்து வந்து

துண்டாய் நெல் ஆகாமல் தூர அது சிதறாமல்
துலாக்கோள் கணக்காக தூக்கி அதை குத்து விட்டேன்

தொம் என்ற சத்தத்தோடே - நெல்
தோலை அது உரித்ததம்மா

உரலிலிருந்து அரிசி சிந்தாமல் சேர்ந்திருக்க
உரலுக்கு குந்தாணி மேலிட்டு - உலக்கை

குத்துக்களை வேகமிட்டு நெல் குதிர்களை
அரிசியாக்கி குடும்பத்திற்கு சோறு சமைத்தேன்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (10-Jul-19, 8:59 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 82

மேலே