வாழிய தமிழ் வாழியவே

வாழிய தமிழ் வாழியவே!

அவள் அமிழ்தினும் இனியவள்
இயல்பாய் இசையாய் நாடகமாய்த் திகழ்பவள்
ஆயிர ஆயிரமாண்டாய் வாழ்பவள்
எனினும் எப்போதும் இளமையாய் இருப்பவள்
உம்மையும் எம்மையும் இணைத்தவள்
உலக மொழிக்கெல்லாம் மூத்தவள்

தொல்காப்பியமும் திருக்குறளும் தொடுத்தவள்
ஐம்பெருங்காப்பியங்களையும் ஐஞ்சிறுங் காப்பியங்களையும் கொடுத்தவள்
அகத்திலும் புறத்திலும் திளைத்தவள்
பக்தியையும் புரட்சியையும் ஒரு சேர ஊட்டியவள்
கல்லில் மட்டுமல்ல கணினியிலும் ஒளிர்பவள்

அவள் நம் தாயவள், தமிழ்த் தாயவள்
வாழிய அவள் வாழியவே!

எழுதியவர் : தமிழ் மைந்தன் - ரிச்சர்டு (11-Jul-19, 3:36 am)
பார்வை : 2586

மேலே