மனப் பேய்

மெதுவாக வாசல் பக்கம் வந்தான் வலது கையை எடுத்து.பக்கம் திரும்பி தன் பெட்ரூம் இருக்கும் அறையின் வெளிப்புறம் கண்ணாடி ஜன்னலில் கண்களை வைத்து உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்தால் தூக்கிவாரி போட்டது .நெஞ்சு திக் திக் என்று அடித்து க்கொண்டது.அடிப்பாவி எல்லோரும் சொன்னதுபோல் இவள் ஒழுக்கம் கெட்டவளாக அல்லவா போய் விட்டாள். சும்மா விடக்கூடாது யார் என்று பார்த்து விட வேண்டும் .அவன் கண்ட காட்சி ஆத்திரத்தை உருவாக்கியது தன் செல்ல மனைவி ஆசை அழகி அவளுடைய முகம் பார்க்க முடிந்தது ஆனால் எதிரில் உட்கார்ந்திருந்தவனுடைய.முதுகுதான் தெரிந்தது. யார் இவன் ?உட்கார்ந்து இருக்கிறபோதே தலையில் தொப்பிவைத்து க் கொண்டுஉட்கார்ந்திருக்கிறான்.யார் இவன்? முன் பக்கமாக வந்தான் வேகமாக கதவை தள்ளி உள்ளே நுழைந்தான் பெட்ரூமுக்குள் கதவு திறந்தே இருந்தது. அடிப்பாவி கதவைத் திறந்து வைத்துக்கொண்டே இவனோடு கொஞ்சி கொண்டு இருக்கிறாள் .உள்ளே நுழைந்தவுடன் சத்தத்தைக்கேட்டு தொப்பி வைத்தவன் திரும்பினான்.திரும்பியவுடன் மச்சான் நல்லா இருக்கீங்களா ?எத்தனை நாளா உங்களை பார்க்கறதுக்காக வரேன். ஆனா நீங்க வேலைக்கு போனா ராத்திரி 11 மணிக்கு தான் வரீங்க உங்களைபாக்கவே முடியல . மனைவி மகிழ்ச்சியாக பேசினாள் என்னங்க என் தம்பி பாரினில்லிருந்து வந்து ஒரு வாரம் ஆகுது உங்களை பார்க்கிறதுக்காக இந்த ஒரு வாரமாக வரும் . ஆனா உங்களை பாக்க முடியல அப்படியே மனம் குறுகிப்போனது .எவ்வளவு கேவலமாக நினைத்து விட்டேன் நம்பிக்கைதானே வாழ்க்கை இப்படி யாராவது நினைப்பார்களா ?இவ்வளவு சீக்கிரம் என்னுடைய நம்பிக்கை தடுமாறிப் போனது வாழ்க்கை என்பது பரஸ்பர நம்பிக்கை யில்இருக்கிறது . எப்படி என்னுடைய மனம் இப்படி பேயாய்மாறலாம். எல்லாம் என்னுடன் சேர்ந்த நண்பர்கள் தான் என்பது புரிந்தது எப்பொழுது பார்த்தாலும் அவர்கள் பெண்களை கேவலமாகவும் ஒழுக்கம் கெட்டவர்களாகவும் பேசுவதுதான் தன் மனதில் பதிந்து இருக்கிறது என்பது தெரிந்தது . மானசீகமாக அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான் இனி இப்படி ஒரு நினைப்பு தன் மனதுக்கு வரக்கூடாது என்று முடிவுசெய்தான் . என்ன மச்சான் பேசாம இருக்கிங்க? ஒன்னு இல்ல ஒன்னும் இல்ல உன்னை பார்த்தது அப்படியே அதிர்ச்சியாகி ட்டேன்.நல்லா இருக்கியா என்று மகிழ்ச்சியோடு அவனது கரங்களை பற்றி தன்னோடு அணைத்து க்கொண்டான்.இருங்க காபி கொண்டு வரேன் நாம மூணு பேருமே சாப்பிடலாம் என்று சொல்லி மனைவி எழுந்து சமையல் அறைக்கு சென்றாள்.

எழுதியவர் : (11-Jul-19, 8:06 am)
சேர்த்தது : ராமஜோதி சு
Tanglish : manap pei
பார்வை : 100

புதிய படைப்புகள்

மேலே