இன்னும் வரும் எல்லாமும்

அலைகின்ற காற்று அகன்று விட்டாலோ
எரிகின்ற கதிரு அணைந்து விட்டாலோ
பொழிகின்ற முகிலு நெருப்பை தந்தாலோ
புவி காக்கும் புல்லு எரிந்தபடி இருந்தாலோ
வீதி எங்கும் பாறை உருண்ட படி சென்றாலோ
உண்ணும் உணவு வயிற்றைக் கிழித்தாலோ
மரங்கள் எல்லாம் மடமடவென நடந்தாலோ
மயிர் கால்கள் தோறும் குருதி வடிந்தாலோ
மண் எல்லாம் மக்கி வலு குறைந்தாலோ
மாற்று உலகத்தை படைக்க மனிதனால் முடியுமோ
மாபெரும் பக்தி மாற்றத்தைத் தருமோ
மதிப்பு மிக்க செல்வத்தால் மறு சுழற்சி ஆகுமோ
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Jul-19, 8:29 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : innum varum ellamum
பார்வை : 34

மேலே