என் விழிகளின் ஈரமெல்லாம்

மாயமாகும் காற்றைப்போல
என் நெஞ்சம் காயமனதென்ன
பட்டும் படாத வலிகள் இன்னும் எத்தனை நாட்கள்

அன்று எனக்கு தோன்றவில்லை
நீ எனக்குள் தோன்றுகிறாய் என்று
நீளமான பாதையில் உந்தன் ஆழமான காலடி
சேரும் இடம் காதல்தானோ

நிழற்கூடம் கூட இல்லாமல் இருந்த எனக்கு
உயிர்கூடம் கொடுக்கிறாய்
என் விழிகளின் ஈரமெல்லாம்
இன்று தூரமானது உன்னால்

BY ABCK

எழுதியவர் : (11-Jul-19, 6:45 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 67

மேலே