காதல் கொண்டேன் கொடூரமாய்

உன்னை படைத்த பின்னே - பாலில்
வெண்ணையைப் படைத்திருப்பான்
கண்ணை பார்த்த பின்னே - கடும்
குளிரை உருவாக்கி இருப்பான்

புருவ வளைவைக் கண்டு
நிலவை பிறையாய் தேய்த்திருப்பான்
முகத்தின் பொலிவைப் பார்த்து
யானைக்கு தந்தம் தந்திருப்பான்

பச்சை வண்ண நரம்பைக் கண்டு
கிளிகளுக்கு நிறத்தை தந்திருப்பாள்
உதட்டின் வடிவைக் கொண்டு
உலக கனிகளை படைத்திருப்பான்

உள்ளாய் நீ அதிசயமாய்
உலகிலோர் பெரும் எழிலாய்
காதல் கொண்டேன் கொடூரமாய்
கைப்பற்றுவேன் உன்னை கம்பீரமாய்.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Jul-19, 7:39 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 275

மேலே