கலித்தாழிசை

வான்மழை பொய்க்க விளைநிலங் காய்ந்து,குடி
தண்ணீரு மின்றித் தவிக்கின்றார் அன்பர்காள் !
தண்ணீரு மின்றித் தவித்திருப்ப ராமாகில்
கண்ணீர் துடைக்கவழி கண்டிங்கு சொல்வீரே !
கண்ணாய்க் கருதியே காடுகளைக் காப்பீரே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Jul-19, 12:23 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 17

மேலே