அறுசீர் வண்ண விருத்தம்

அறுசீர் வண்ண விருத்தம் ....!!!
*********************************************
தனத்தத் தத்த தனதனா ( அரையடிக்கு )

படித்துப் பெற்ற அறிவிலே
படைப்பைப் பற்றி யுணரலாம் !
இடித்துச் சுட்ட முழுமையாய்
எழுத்திற் செப்ப மடையலாம் !
வடித்துக் கொட்டி விடுவதால்
மனத்தைச் சுற்று மிடரெலாம்
வெடித்துப் பற்றி எரியுமே
வெளிச்சக் கற்றை யொளிருமே !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Jul-19, 12:27 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 10

மேலே