கன்னக்குழி_அழகில்_களவு_போகுதே_மனசு

கன்னக்குழி_அழகில்_களவு_போகுதே_மனசு
##########################
கன்னக்குழி உடம்புக்காரி
___கார்குழலில் கலந்தே
வசியம் செய்யும்
___வித்தக காரி
அல்லிப்பூ போலவே
___அசைவை காட்டியே
பொங்கல் வைத்தே
___இனிமை தந்து போறாளே
அருவியென மனமோ
__ உணர்வை சொட்டுதடி
மருதாணி சிவப்பழகி
__கன்னக்குழி கள்ளழகி

பொன்னரளிப் பூவாய்
__ உந்தன் முகமும்
பொன்னான மனதையும்
___ஈர்ப்பில் கவருதடி
மயக்கும் விழியிலே
___தேனூட்டும் மலரே

நெஞ்சிலே மழை
__தூவியே குளிரடி
கூரான பார்வையோ
___குனிய வைக்கிறதடி
காலம் கனியுமா
__கனவு நிறைவேறுமா
அகமும் புறமும்
__உறக்கமாய் போகிறதடி

காலமெல்லாம் காத்திடுவேன்
__வானின் விண்மீனை
அழகாக்க ஆபரணமாய்
___அணியவே துணிந்திடுவேன்

கன்னக்குழி அழகில்
_மனமும் களவு போனதடி

அகிலன் ராஜா

எழுதியவர் : அகிலன் ராஜா (12-Jul-19, 8:55 am)
பார்வை : 238

மேலே