இதயராணி

இதயராணி🌹

அழகே! என் அமுதே!
அற்புதமே! என் ஆனந்தமே!
வா, அந்த நீல வானில் இருவரும்
உஞ்சல் கட்டி ஆனந்தமாக ஆடுவோம்.

ஆனந்த பரவசத்தில் ஊஞ்சலில்
வேகமாக ஆடும் போது உன் பொற் பாதங்களால்
வென்னிலவை எட்டி உதைத்து விடாதே
என் கண்ணே.
தப்பி தவறி உன் பாதம்
நிலவு மீது பட்டு விட்டால்
அது உருண்டோடி
பூமியில் விழுந்து விடபோகிறது.

எங்கே நட்சத்திரம் கூட்டம் காணவில்லை.
நிச்சயம்
புரிந்து விட்டது
உன் கண்களை பார்த்து
பிறகு அவையாவும் அவ்வியம் அடைந்து அந்த கூட்டம் தன்னை முழுவதுமாக மறைந்து கொண்டது .

வின்மீண் கூட்டமே வாருங்கள்
ஏன் வெட்கம்
வந்து என் தேவதையை பாருங்கள்
அப்படியே அந்த
மேக கூட்டத்தையும் அழைத்து வாருங்கள்
அவையும் கூட அணியாதாதுக்கு இவள் எழில் கூந்தல் கண்டு அழுக்காறு அடைந்துவிட்டதாம்.

இன்பமே!
என் இதய ராணியே!
ஊஞ்சல் ஆடியது போதும்
காரணம் நீ மன்மதன் கண்ணகளில் அகப்பட்டால்
என் பாடு திண்டாட்டம் தான்
என் வாழ்வில் ஒளி தீபம் ஏற்ற வந்த என் இதயக்கனியே! வா
நம் இடத்திற்கே சென்றுவிடுவோம்.

-பாலு.

எழுதியவர் : பாலு (12-Jul-19, 9:31 am)
சேர்த்தது : balu
பார்வை : 345

மேலே