கழுத்து மச்சம் அழைக்குது

மல்லிகையாளே மல்லிகையாளே
மனசு ஏங்குது மல்லிகையாளே - நீ
உள்ளத்தின் உள்ளே புகுந்ததனாலே
உள்ளம் வாடுது உன் நினைப்பாலே

மெல்லிய இடையோடு நீ நடந்தாலே
மின்னல் அடிக்கு என் இதயத்துள்ளே
கன்னத்தில் உள்ள கதகதப்பைக் காண
எண்ணிய போதே சிலிர்க்குது மனமே

கையைப் பற்றிக் காற்றில் சுற்ற
மனது துடிக்குது வாயேண்டி கிட்ட
கழுத்து மச்சம் அழைக்குது என்னை
கவ்விக் கொள்ள தருவாயோ உன்னை

அழகு மலரில் அசைந்தாடும் இதழே
அடுத்த பிறவியிலும் நீயே என் துணையே.
பழுத்த பழம் நோக்கி வருகின்ற கிளிபோல்
பார்த்து நிற்கிறேன் வருவாயோ கனியே.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Jul-19, 9:34 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 53

மேலே