பார் ரசி செல்

மலர்களைக் கொய்யாதே
மௌனமாகப் பார்த்துச் செல் !
இயற்கையில் பிறந்து
இளம் காற்றினில் சிரித்து மகிழ்ந்து
பின் வாடி உதிர்ந்து மடியும்
அதன் ஒரு நாள் வாழ்க்கையில்
உன் விரல் கொண்டு குறுக்கீடு செய்யாதே !
அழகியல் உணர்வு உண்மையில் உனக்கு இருக்குமாயின்
மலர்களைக் கொய்யாதே மௌனமாய் ரசித்துச் செல் !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jul-19, 9:49 am)
Tanglish : paar rasi sel
பார்வை : 55

மேலே