நாகப்பழம்

1.
தரையெலாம் நீலவண்ணம்
சிறுவன் மண் ஊதி
ருசித்து தின்கிறான் நாகப்பழம்.
2.
கூடை நிறைய நாகப்பழம்
டம்ளரில் அளந்து விற்கிறாள்
வயது முதிர்ந்த கிழவி.
3.
நாகமரத்தில் முனி வாசம்
ஊர்மக்கள் நெருங்க பயம்
துணிந்து இரவு உறங்கும் பறவைகள்.

எழுதியவர் : ந க துறைவன். (12-Jul-19, 4:18 pm)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 49

மேலே