என்னவள் கண்ணின் அழகு

இவள் கண்களின் அழகை எப்படி
வார்த்தைக்குள் அடக்கிடுவேன் கவிதையாய் புதுவிதமாக
என்று நான் சற்று யோசித்தேன், என் கற்பனை
என்முன் என்னைவிட விரைந்து செல்ல ,
மயிலாள் இவள் விழிகள் மான்விழி என்பேனா
அதில் மருட்சியைக் கண்டு …..
இல்லை இல்லை துள்ளும் விழியாள் இவள்
விழிகளை கயல்விழி என்பேனா …..இல்லை
உருண்டு திரண்டு ஒளி சொட்டும் விழிகளை
தாமரை என்பேனா.. இதுவெல்லாம் ஏற்கனவே
கவிகள் பாடியவையே ….. இப்படியே நான்
யோசிக்கையில் என் வீட்டு மாமரத்து
கிளைகளில் சித்திரையில் பூத்து குலுங்கி
சிறு காய்களாய்,,, வடுவாய் அழகாயிப் பொலிவாய்
காட்சி தந்த வடுமாங்காய்…. அதில் பிளந்த
வடு ஒன்று என் கண்முன்னே அருகே தெரிந்தது
அதில் கண்டேன் நான் என்னவள் கண்களின்
பூரண அழகை…… வடுபிளந்த கண்ணாள்
என்பேன் நான் இனி இவள் கண்ணின் அழகை !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Jul-19, 8:33 pm)
பார்வை : 532

மேலே