நட்பு

பார்த்த முதல் பார்வையில்
பணிவாய் , கனிவாய் அன்பே
உருவாய் அடி பணியும் சேவகனாய்
காட்சி தந்தான் ரகுகுல திலகன்
முடிசூடா அயோத்தி மன்னன் ராமன்முன்
கங்கைக்கரையில் படகு ஓட்டிவந்த
நிஷாத குல தலைவன்... குகன்
ஒரே பார்வையில் ராமன் இவனைத்தழுவிக்கொண்டான்
நல்ல நண்பனாய் ' என்னுடன் பிறந்த
மூவரோடு நண்பா இன்று முதல்
நீ என் பிறவா தம்பியாவாய் என்றானே
ஒரு பார்வையில் நண்பன் aaana குகன்
அந்த நட்பு அப்போதே முதிர்ந்து
ரத்தம் இல்லா புது உறவும் சேர்க்க !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Jul-19, 8:52 pm)
Tanglish : natpu
பார்வை : 541

மேலே