தேங்காய் எண்ணெய் பயன்பாடு ஆரோக்கியமானதா----------------------------------------19 ஜூன் 2017

மாட்டுக் கொழுப்பு மற்றும் வெண்ணெய்க்கு நிகராக தேங்காய் எண்ணெய், ஆரோக்கியமற்றது என அமெரிக்க இதய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


தேங்காய் எண்ணெயில் அதிகப்படியான கொழுப்பு இருப்பதால் அது கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் என அமெரிக்க இதய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தேங்காய் எண்ணெய் நம் உடலுக்கு நல்லது என்று விற்பனை செய்யப்படுகிறது; மேலும் சிலர் தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு சாட்சூரேடட் எனப்படும் மிகுதியான பிற கொழுப்பைக் காட்டிலும் நல்லது என்றும் சிலர் கூறுவர்.

இருப்பினும் இதை நிருபிக்க தகுந்த ஆய்வுகள் இல்லை என அமெரிக்க இதய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஆரோக்கியமானதா?

நாம் எந்தக் கொழுப்பை உண்ணலாம் என்ற குழப்பம் தொடர்ந்து கொண்டே உள்ளது.

பன்றி கொழுப்பு போன்ற விலங்குகளின் கொழுப்புகள் உடலுக்கு தீங்கானதாகவும், தாவர எண்ணெய்களான ஆலிவ் எண்ணெய் மற்றும் சூரிய காந்தி எண்ணெய் ஆரோக்கியமானதாகவும் கருதப்படுகிறது.

மிகுதியான கொழுப்பு ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. இருப்பினும் அதை அனைவரும் ஒப்புக் கொள்வதில்லை.

மிகுதியான கொழுப்புள்ள உணவுகளை உண்பதால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து, ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படக் கூடும் அல்லது இதய நோயும், பக்கவாதமும் வரும் வாய்ப்பை அதிகரிக்கும்.

அமெரிக்க இதய கூட்டமைப்பின் படி, தேங்காய் எண்ணெயில் உள்ள 82 சதவீத கொழுப்பு மிகுதியான கொழுப்பாக கருதப்படுகிறது. இது வெண்ணெயில் உள்ள 63 சதவீதம், மாட்டுக் கொழுப்பில் உள்ள 50 சதவீதம் மற்றும் பன்றிக் கொழுப்பில் உள்ள 39 சதவீதம் ஆகியவற்றைவிட அதிகமாகும். மேலும் பிற மிகுதியான கொழுப்பைப் போல் இதுவும் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிலர் தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு ஆரோக்கியமானது என்று சொல்கிறார்கள் ஆனால் அதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என அமெரிக்க இதய கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

மக்கள் தாங்கள் உண்ணும் மிகுதியான கொழுப்பை குறைத்து கொண்டு அதற்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் அல்லது சூரிய காந்தி எண்ணெயை பயன்படுத்தலாம் என அமெரிக்க இதய கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

உணவுப் பொருட்களின் மேல் உள்ள லேபல்களில் மிகுதியான கொழுப்பின் அளவு குறிப்பிட்டிருக்கும்.

ஆனால் சமச்சீரான உணவில் கொழுப்பும் இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கொழுப்பை முற்றிலுமாக தவிர்க்க கூடாது. உடலுக்கு தேவையான ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின்கள் ஏ, டி, இ ஆகியவற்றை கிரகிக்க கொழுப்பு தேவைப்படும்.

கொழுப்பை குறைப்பது மட்டும் இதய ஆரோக்கியதிற்கு போதுமானது அல்ல. கொழுப்பை குறைத்து அதற்கு பதிலாக நாம் என்ன உண்கிறோம் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். மிகுதியான கொழுப்பிற்கு பதிலாக சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாமல் குறைந்த கொழுப்பு, முழு தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டனின் இதய அறக்கட்டளையின் விக்டோரியா டெய்லர் தெரிவிக்கிறார்.

மொத்த உணவை கருத்தில் கொண்டே உணவில் எந்த ஒரு மாற்றமும் நடைபெற வேண்டும்.

பாரம்பரிய மத்திய தரைக்கடல் உணவுகளில் அதிகபடியான காய்கறிகளும், ஆலிவ் எண்ணெயும் மற்றும் மிதமான அளவுகளில் புரதம் இருக்கும். எனவே கொழுப்பின் அளவை குறைப்பது மட்டுமின்றி அது இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கும். என்கிறார் விக்டோரியா.

மிகுதியான கொழுப்பிற்கு பதிலாக நிறைவுறா கொழுப்பை உணவில் எடுத்துக் கொள்ளலாம். வெண்ணெய்க்கு பதிலாக எண்ணெயை பயன்படுத்துதல், அவகேடோ, எண்ணெய் மிகுந்த மீன், கொட்டைகள் மற்றும் விதைகளை உண்ணலாம். மிகுதியான கொழுப்பை கொண்ட கேக்குகள், பிஸ்கட்ஸ் மற்றும் சாக்லெட் , கொழுப்பு மிகுந்த இறைச்சி ஆகியவற்றை தவிர்க்கலாம் என்று அறிவுரை கூறுகிறார் விக்டோரியா.

கொழுப்பை குறைக்க செய்யக்கூடியவை

பொறித்தல் அல்லது வறுத்தலுக்கு பதிலாக வேக வைத்து உண்ணலாம்.
சமைப்பதற்கு முன்பு இறைச்சியில் உள்ள கொழுப்பையும், தோலையும் நீக்கலாம்.
எண்ணெயை குறைத்து பயன்படுத்தலாம்.
நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு

கொலஸ்ட்ரால் என்பது சில உணவுகளில் இருக்கும் ஒரு கொழுப்பான பொருள்.

குறைந்த அழுத்த லிப்போ புரத கொலஸ்ட்ரால் உடலுக்கு கெடுதியை விளைவிக்கும்; அது ரத்தக் குழாயின் சுவர்களில் படிந்து கொண்டு அது அடைப்பை ஏற்படுத்தும் அதன் விளைவாக இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை வர வாய்ப்புகள் உள்ளன.

உயர் அழுத்த லிப்போ புரத கொலஸ்ட்ரால் உடலுக்கு நல்லதாக கருதப்படுகிறது. ஏனென்றால் குறைந்த அழுத்த கொலஸ்ட்ராலை இது கல்லீரலுக்கு கொண்டுச் சேர்க்கிறது. அதிகப்படியான நல்ல கொலஸ்ட்ரால் சிறிதளவு கெட்ட கொலஸ்ட்ரால் என்ற விகித்தில் இருக்க வேண்டும்.

பிபிசி

எழுதியவர் : பிபிசி தமிழ் : (14-Jul-19, 5:59 am)
பார்வை : 23

மேலே