என்னவள்

காரிருளாய் இருண்டுபோன என் நெஞ்சில்
முழு நிலவாய் இருளோட்டி வந்து புகுந்தாள்
குளிர்தந்து , ஓடும் நிலவாய் இல்லாமல்
நின்ற நிலவாய் நித்தம் ஒளி தந்து என் நெஞ்சில்
நல்லவளாய் இனியவளாய் நேசமொடு பாசமும்
சேர்த்து காதலியாய் என்னவளாய் துணைவியும் ஆனாள் அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Jul-19, 1:56 pm)
Tanglish : ennaval
பார்வை : 214

மேலே