சாமத்து ஏக்கம்

சாமத்திலே
சேவல் கறுபுறுக்குது /
கம்பிக்
கூட்டுக்குள்ளே சரசரப்பு கேட்குது/
ஏன் -மாமா அது ஏன்- மாமா?
கொக்கரிக்கும் கோழியும்
கூடவே குறுகுறுக்குது /
ஏன் -மாமா அது -ஏன் மாமா/

என் நெஞ்சுக்குள்ளும்
தாகம் இன் நேரத்தில் /
ஏன் -மாமா அது ஏன்- மாமா/
வெட்கம் திறக்கும் நேரம்
எவை அதைச் சொல்லி
விட்டுப் போ மாமா -போ மாமா/

தாகத்துக்கும் மோகத்துக்கும்/
யாரிடமோ சாவியுண்டு மாமா/
இந்தப் பொண்ணுக்கிட்ட சொல்லிச் சென்றால் தேவையில்லை மாமா/

வட்ட நிலவை
எட்டிப் பிடிக்கலாமா? மாமா
வெட்ட வெளியிலே முத்தமிட்ட படி
நாம் வட்டமிட்டு ஆடலாமா? மாமா /
தொட்டுத் தொட்டு பாடலாமா? மாமா/
தொடரும் ஏக்கம் தீர்க்கலாமா? மாமா/
பக்கம் அமர்ந்த மாமா இன்னும்
மௌனம் காக்கலாமா ?
தேக்க மரத் தேகமதைக் காகக்க வைக்கலாமா ? மாமா ஏன்-மாமா/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Jul-19, 7:40 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 275

மேலே