ஆழக் காதல்

புங்கமரம் பூத்ததடி
பொலிகாளை ஓடுதடி
புதியதாக காதல் வந்து
புகுந்ததடி என் மனதில்

நெடுநெடுவென வளர்ந்தவளே
நெளிந்த புருவம் கொண்டவளே
நெத்திலி மீனாட்டம் - விழியால்
நேராய் என்னைப் பார்த்தவளே

அத்திப்பழ நிறத்தாளே
அழகு துள்ளும் முகத்தாளே
ஆழக்காதல் கொண்டுவிட்டேன்
அன்பாய் என்னை அணைப்பாயோ

பகலில் உன்னை பார்க்கின்றேன்
பாழ் இரவு பாடாய் படுத்துதடி
பனங்காட்டு மட்டைப் போலே
மனம் சல சலப்பில் வாடுதடி.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Jul-19, 10:34 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : AAZHAK kaadhal
பார்வை : 141

மேலே