கன்னிநிலம்-----------------------------ஜெயமோகன்

நான் இரு ராணுவ நண்பர்களுடன் ராணுவ முகா மில் தங்கியிருந்திருக்கிறேன். கடைசியாக நண்பர் கமாண்டென்ட் சோமசுந்தரத்துடன் டாமனில் தங்கி யிருந்தபோது ஏற்பட்ட வேகத்தில் எழுதியது இந்தக் கதை. இதை ஒரு த்ரில்லர் என்றுதான் சொல்ல வேண்டும்; கொஞ்சம் காதல். இக்கதை சொற்கள் வழியாக உருவாகும் மிகையுணர்ச்சிகளால் ஆனது. மிக ரொமாண்டிக் ஆனது; ரொமாண்டிக் மனநிலையில் எழுதியது. எங்கே தன்னை இழந்து ஒரு நிலை கூடுகிறதோ அங்கே ஆன்மீகத்துக்கான ஒரு வாசல் இருக்கிறது; அதில் காதலும் ஒன்று. ஆகவேதான் பிரேமை என்பது நூற்றாண்டுகளாக நம் மரபில் ஒருவகை ஆன்மீகமாகவே கருதப்படுகிறது. காதல் போன்ற ஒன்று அனைவரையும்தான் பைத்தியமாக ஆக்குகிறது. ஒரு எளிய மனிதனை பைத்தியமாக ஆக்கினால் அதில் கதை இல்லை. ஒரு அபாரமான மனிதனை அப்படி ஆக்கினால்தான் அது கதை.

எழுதியவர் : ஜெயமோகன் (16-Jul-19, 6:18 am)
பார்வை : 63

மேலே