அவன் பார்வை

நான் முதல் முதலாய் உன்னைப்
பார்த்தபோது உந்தன் விழிகளின்
ஓரத்தில் கனிவு தேனாய்க் கசிந்திட கண்டேன்
உந்தன் பார்வையில் கண்ணியம் தெரிந்தது
உன் புன் சிரிப்பில் என் மனம் இழந்தேன்
அதில் நேசம் மிளிர்ந்தது அதனால்
நீயேதான் என்காதலன் என் மணாளன்
என்று உன் பார்வையில் உன் விழியின் எழிலில்
அந்த ஒரே நொடியில் நான் தீர்மானித்தேன்
உந்தன் பார்வை ஒன்றே போதுமடா இனி எனக்கு
என் கனவுகளை நெனவாக்கிக்கொள்வேன் நானே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Jul-19, 12:07 pm)
Tanglish : avan parvai
பார்வை : 267

மேலே