303 இலியிச் பின்னிணைப்பு

இன்று காலையில் நான் கோழிக்கோடு வந்த பின் மீண்டும் ஈஸ்வரன் நாயரோடு தொடர்பு கொண்டேன்.

அவர் மதிய உணவை தன் வீட்டில் சாப்பிட்டு கொள்ள வேண்டுமென்று கேட்டு கொண்டதுடன் அவரை சந்திக்க காலை பத்து மணிக்கு வர சொல்லி இருந்தார்.

அவர் தேசபோஷினி பப்ளிக் லைப்ரரியில் பணி புரிந்து ஓய்வு பெற்று விட்டார். நான் சரியாக பத்து மணிக்கு சென்றபோது தளி க்ஷேத்திரம் சிவன் கோவிலுக்கு சென்றிருந்தார்.

நான் காத்திருக்கவும் அவர் வரவும் சரியாய் இருந்தது.

பார்க்க அசோகமித்திரன் போலவே இருந்தார்.

என்னை தொடர்ந்து விசாரித்து கொண்டே இருந்தார். டார்ஜிலிங் சென்று வந்தது வரை அவரிடம் கூறினேன்.

மிகுந்த பொறுமையோடு கேட்டு கொண்டிருந்தார்.

இலியிச் ஒருமுறை அங்கு புனத்தில் குஞ்ஞப்துல்லாவை சந்திக்க வந்தபோது தன்னோடு பேசிக்கொண்டு இருந்ததாக கூறினார்.

தெள்ளத்தெளிவாக அந்த உரையாடல் அவரிடம் இப்போது நினைவில் இல்லை.
உபநிஷத்துகள் பற்றியும் கேரள புராணிக தொன்மங்கள் பற்றியும் பற்றி பேசினோம் என்றார்.

வயது முதிர்வை கொண்டு அவரை சிரமம் செய்ய எனக்கு மனமின்றி போனது.

நான் இன்னும் இருநாட்கள் இங்கே தங்கி இருக்க வேண்டும் என்று சொல்லி பின் தன் வீட்டில் ஒரு அறையை ஏற்பாடு செய்து கொடுத்தார்.

அன்றிரவு அவர் தன்னிடம் இருந்த இலியிச் எழுதிய அனைத்து கடிதங்களையும்  காட்டினார்.

அவை போக இன்னும் இருக்கலாம் என்றும் தான் நம்புவதாக சொன்னார்.

முடிவில்...இவைகளை நீங்களே வைத்து கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரன் நாயர் கூறியபோது என்னால் நெகிழ மட்டும் முடிந்தது.

எழுதியவர் : ஸ்பரிசன் (16-Jul-19, 5:46 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 15

மேலே