கவிதை எழுதும் மெரினா கடலலைகளே

கடற்கரை மணல் தழுவி கவிதை எழுதும்
மெரினா கடலலைகளே
அதை எண்ணத்தில் பதித்து எழுத்திலும் பதிவு செய்கிறோம்
ஏன் குத்து விளக்கேற்றி புத்தகமும் வெளியிடுகிறோம்
கடல் அலைகளே கவலை வேண்டாம்
ஆனால் இப்பொழுது நீங்கள் ஒன்று செய்யவேண்டும்
நீலவானத்தை காதலில் முத்தமிட்டு
வான் அமுதமாய் நீங்கள் பொழியவேண்டும்
தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க வேண்டும் தீர்த்தால்
தலை நகரின் கடல் மணல் வெளியில் அலைகளே
உங்களுக்கும் ஒரு சிலை எழுப்புவோம் இது நிச்சயம் !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-19, 8:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே