அழுகை ஆயிரம்

அழுகை ஆயிரம் !

இயற்கையின் மோதல் இறுதியில்
அழுகையாய் தெரிந்திடும்
வானத்து மழை !

உழைப்பின் வலிமையால்
அழுகையாய் தெரிந்திடும்
உடலின் வேர்வை !

உள்ளத்தின் துயரங்கள்
உலகிற்கு காட்டிட
அழுகையாய் தெரிந்திடும்
கண்ணீர் பெருக்கு !

கதிரவனின் கோபத்தை
தாங்காமல் அழுகையாய்
கண்களுக்கு தெரிந்திடும்
கானல் நீர்

பொங்கி சிரித்து களைத்து
இறுதியில் வழியும்
ஆனந்த அழுகை !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (17-Jul-19, 10:16 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : azhukai aayiram
பார்வை : 197

மேலே