மனதைத் தேற்றும் மாமருந்தும்

பறவைகளுக்கு பல்லை வைத்து
பல வகை பழ விதைகளை மென்று

தின்று துகளாக்கித் தூவச் செய்ய
திங்கள் தோறும் கங்கணம் கொண்டிருந்தால்

திக்கெட்டும் சிறந்த மரங்கள் செழித்திடுமோ
திசை தோறும் செடி கொடிகள் முளைத்திடுமோ

மரணம் மாற்றும் மூலிகைகளும்
மனதைத் தேற்றும் மாமருந்தும்

மண்ணில் செழித்து மகத்துவம் தந்திடுமோ
தண்ணீரை வர வைக்க விண் மேகத்தை கூட்டிடுமோ

ஒன்றில் இருந்து ஒன்றிற்கு உயிர்க்கான வழியும்
ஒன்றையொன்று ஒன்றிய ஒவ்வொன்றும் உள்ளதடா
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (17-Jul-19, 6:49 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 168

மேலே