யாப்பால் காப்பிட்டு

நீண்ட வழி வந்த மொழி தமிழ் மொழியே
ஆண்ட மொழி அனைத்தினுளும் செம்மொழியாம்

ஆறு மலை கடல் பாலை கண்ட மொழி
ஆகச் சிறந்த மொழிகளுள் தலைப்பு மொழி

சிறந்து ஆண்ட மன்னர்களை கொடுத்த மொழி
சிறந்த இளமை தோற்றத்தோடு உள்ள மொழி

அனல் புனல் தேர்வுகளைக் கண்ட மொழி
அறிவில் சிறந்த அனைவராலும் போற்றும் மொழி

பல மொழிகளைப் பாசத்தோடு வளர்த்த மொழி
பட்டயமும் பட்டமும் கொடுத்த மொழி

மூவாயிரம் ஆண்டிற்கு முன்பே மூதறிஞர்களால்
மூக்கூடல் கண்டு முன் இலக்கணம் கண்ட மொழி

பல மொழிகளின் பலத்தை பார்த்து மகிழ்ந்து
பன் திறனோடு தன்னை பக்குவப் படுத்திய மொழி

யாப்பால் காப்பிட்டு யாவருக்கும் யானைப் பலம் காட்டி
யெளவனத்தோடு எட்டுத்திக்கும் ஆளும் மொழி.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (18-Jul-19, 9:09 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 136

மேலே