முதுமொழிக் காஞ்சி 83

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
செற்றுட னுறைவோனைச் சேர்தனல் கூர்ந்தன்று. 3

- நல்கூர்ந்த பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், தன்னைச் செறுத்தொழுகுவானைச் சென்றடைதல் வறுமையுறும்.

உட்பகை கொண்டு உடன் வசிப்பவனை நண்பனாகக் கொண்டு ஒழுகுதல் வறுமையுடையதாகும்.

செற்று (செறு - கோபி, வெறு) - கோபித்து - பகைகொண்டு.

உட்பகை யுடையாரை உண்மை நண்பராகக் கொண்டொழுகுதல் கேட்டை உண்டாக்கும்.

உடன்பா(டு) இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ(டு) உடனுறைந் தற்று. 890 உட்பகை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jul-19, 10:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

மேலே