சாந்தமூர்த்தி ஒய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்

ஆசி கந்தராஜாவின்…
முற்றம்
ஆசி கந்தராஜாவின்... Facebook
ஆசி கந்தராஜாவின்... Twitter
ஆசி கந்தராஜாவின்... Email
ஆசி கந்தராஜாவின்…
முகப்புசிறுகதைபுனைவு கட்டுரைகுறுநாவல்நேர்காணல்கட்டுரைமொழிபெயர்ப்புவிமர்சனங்கள்நாட்குறிப்புநூல்கள்என்னைப்பற்றிஅறிவிப்புகள்தொடர்புக்கு
சாந்தமூர்த்தி. (ஒய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்)
Capture mmmmபேராசிரியர் ஆசி. கந்தராஜா அவர்களை நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன்.முதலில் ஜெயமோகனின் புல்வெளி தேசம் என்ற பயண நூலிலும், பிறகொருமுறை வலைப்பூவில் ஒரு நேர்காணலிலும்.
22-09-2018 அன்று விடியும் முன் ஆஸ்திரேலியா வந்த நான் அன்றே மகள் சத்யா-சிவா கைலாசம் இல்லத்தில் “செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்”என்ற பேராசிரியரின் நூலைப் பார்த்தேன். மறுநாள் தூக்க மயக்கமின்றி படித்தேன்.
நல்லதொரு விருந்து. கட்டுரை. கதை, அறிவியல், அங்கதம், வரலாறு,அரசியல், மனிதநேயம், விழிப்புணர்வுஎல்லாம் கலந்த விருந்து. பேராசிரியரின் ஆதர்சம் அ . முத்துலிங்கம் நினைவுக்கு வருகிறார்.
முன்னர் அறிவியல் கருத்துக்களை தன் கற்றதும்,பெற்றதும் வினாவிடைகளிலும், சிறு கதைகளிலும் சுஜாதா தொட்டுக் கொள்வார். ஆனால் அவற்றில் அறிவியலை, பெரும்பாலான நேரங்களில் சுவாரஸ்யம் ஹைஜாக் செய்து விடும். பலர் அறிவியலை மெல்ல தள்ளி வைத்துவிட்டு சுவாரஸ்யத்தை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்வதுண்டு. இந்த ஆபத்து முட்டிக் கத்தரிக்காயில் இல்லை. அறிவியல் என்ற ஹீரோவை மீறி யாரும் துருத்திக் கொண்டு நிற்கவில்லை. அதே வேளை அறிவியல் கருத்துக்கள் பொதுவாக ஏற்படுத்தும் வாசக ஒவ்வாமை இந்நூலில் இல்லை. இது ஆசி. கந்தராஜாவின் குறிப்பிடத்தகுந்த வெற்றி என்றே நினைக்கிறேன். இந்த வெற்றியை அவருடைய அறிவியல் புலமையும் அனுபவமும் ஏற்படுத்திய நம்பகத்தன்மை, எளிய ஈழ கிராமப்புற வாழ்க்கைப் பின்னணி, மண் வாசனை குறையாத மொழி, யதார்த்தமான பாத்திரங்கள் எல்லாம் சேர்ந்து சாத்தியப் படுத்தியிருக்கின்றன.
பல கட்டுரைகளில் (கதைகளில்?) மரபணு மாற்றம் தான் மைய வில்லன். உலகை முழுவதும் விழுங்கி ஏப்பம் விடும்வரை மனித வணிக லாப பசி அடங்காது. அதே நேரத்தில் விழுங்குவதும் விழுங்கப் படும் என்ற எளிய உண்மை புரியப் போவதுமில்லை.
‘வீரசிங்கம் பயணம் போகிறார்’என்ற கட்டுரை அதிகம் நெருக்கமாக உணரவைக்கிறது. ஆசிரியருக்கு வீரசிங்கம் மிகவும் பிடிக்கும் போல. விலாங்கு மீன்களிலும் பரமலிங்கத்துக்குப் பதில் வீரசிங்கம் இரு இடங்களில் வந்து போகிறார்.(68-ஆம் பக்கத்திலும் கடைசி வாக்கியத்திலும்) (அல்லது எனக்கு ஜெட் லாக் முடியவில்லையா?) விலாங்கு மீன்கள் ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமுள்ள பிரச்னையில்லை.
பிஜி, லெபனான் வரலாறுகள் போனஸ். அழகிய ஈழ தமிழ்ச் சொற்கள் போல். இலக்கியத்தில் கட்டுரைகளுக்கு படிநிலையில் உயர்ந்த இடமில்லை. கவிதை.கதை இவற்றுக்குப் பிறகு சற்று தள்ளியே. பேராசிரியர் கட்டுரையில் புனைவை பதியன் போட்டுள்ளார். வணிக நோக்கமின்றி ஒரு ஆரோக்கியமான மரபணு மாற்றம் செய்துள்ளார். விளைவாக கட்டுரை வடிவத்தின் கௌரவத்தை உயர்த்தியுள்ளார். அறிவியல் கருத்துக்களை தன்
புனைவுத் திறனால் சாதாரண மக்களுக்கு கொண்டு சென்றதன் மூலம் பெரும் கல்வித் தொண்டு புரிந்துள்ளார்.நன்றி,பேராசிரியர்!
அவர் கடமையை சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்.
இனி நம் கடமை.
சாந்தமூர்த்தி. (ஒய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்)

திரு. சாந்தமூர்த்தி அவர்கள் மின் அஞ்சலில் இன்று (27. 09. 2018) அனுப்பிய எனது நூல் பற்றிய கருத்து.
--------------------------------
ஆசி கந்தராஜா

எழுதியவர் : ஆசி கந்தராஜா (19-Jul-19, 5:56 am)
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே