கவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது

2019 ஆம் ஆண்டுக்கான ஆத்மாநாம் விருது கவிஞர் வெயில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கவிஞர் வெய்யில் எழுதிய “அக்காளின் எலும்புகள்” கவிதைத் தொகுப்பு கவிதை விருது”க்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது



“கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது”, ரூபாய் 50,000 பரிசுத் தொகை, விருதுப் பட்டயம், விருதாளர் குறித்த புத்தகம் ஆகியவை உள்ளடங்கியது.வரும் நவம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் நாள், சனிக்கிழமை மாலை, சென்னையில் நடைபெற இருக்கிறது.
வெயிலுக்கு வாழ்த்துக்கள்


செய்தி
கவிஞர் வேல் கண்ணன்
அறங்காவலர்
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை
அடையாறு
சென்னை.


Save
Share
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எஸ். ராமகிருஷ்ணன் நூல் விமர்சனம்
==================================


அக்காளின் எலும்புகள் ---கவிஞர் வெய்யில்
====================
கவிஞர் வெய்யில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர். சமகால நவீன தமிழ் கவிதையுலகில் தனித்துவமிக்க கவிதைகளை எழுதி வருபவர். அவரது சமீபத்தைய கவிதைகளின் தொகுப்பான அக்காளின் எலும்புகள் என்ற தொகுப்பை நேற்று வெளியிட்டேன். வடிவ ரீதியில் வெய்யில் கவிதைகள் புதிய அழகியலை உருவாக்குகின்றன . அருவெருப்பென நாம் ஒதுக்கியவற்றை பேருவுகையுடன் வெயில் ஆராதிக்கிறார். புத்துருவாக்கம் செய்கிறார். வெயிலின் கவிமொழி மரபும் நவீனமும் ஒன்றிணைந்து உருவானது.

குற்றத்தின் நறுமணம் (மு.2011) – புதுஎழுத்து பதிப்பகம்.

கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் .ஃப்ராய்ட் (டிச.2016) – மணல்வீடு பதிப்பகம்.
மகிழ்ச்சியான பன்றிக்குட்டி (டிச.2017) – கொம்பு பதிப்பகம்.
அக்காளின் எலும்புகள் (டிச.2018) – கொம்பு பதிப்பகம்
என நான்கு முக்கிய கவிதை தொகுப்புகளை வெய்யில் வெளியிட்டிருக்கிறார். அவசியம் வாசிக்க வேண்டிய கவிதைகள்.

எஸ். ராமகிருஷ்ணன்

Sramakrishnan.

எழுதியவர் : தொகுப்பு வேலாயுதம் (20-Jul-19, 5:24 am)
பார்வை : 127

மேலே