காதல்

இடையில் மெல்ல மெல்ல மங்கி
அவன் காது கேளாமல் போனது
ஆனால் அவன் குரலோ அவன்
பாட பாட அமிர்தமாய் வந்து சேர்ந்தது
கேட்போர் காதில் , மனதில் ……
சிறியோர் பெரியோர், ஆண் பெண்
என்ற பேதம் ஏதுமில்லாது … எல்லோரும்
கண்ணனின் புல்லாங்குழலுக்கு மயங்கிய
ஜீவராசிகள்போல் …..இதில் பல பெண்டிர்
இவன் மீது இவன் குரல் மீது அது தந்த
அமுத கீதத்திற்கு மயங்கி அவன் மீது
அவனே அறியாது மையல்கொண்டது.....
அவன் மனமோ அவன் இசையில் ஒன்றி இருக்க
கேளா அவன் இதயத்தை அந்த ஒருவள்
குரல் அவனுக்கு காதல் கீதமாய்க் கேட்டது !
அவள்தான் அவன் காதலி
அவனைக் கண்டாள் அல்ல .... ஆனால் அவள்
பாடும் கீதம் அவன் இதயத்தில் அலைமோதியதே
காதலாய் ….. எப்படி …. பதில் அவர்களிடமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Jul-19, 1:42 pm)
Tanglish : kaadhal
பார்வை : 79

மேலே