காஷ்மீர் ரோஜாக்கள்

எங்கள் கண்ணீர்தான்
ரோஜாவின் பனித்துளியோ
இந்திய துணை கண்டம் என்பதனால்தான்
எங்கள் வாழ்க்கை தினம் தினம் கண்டமாகிறதோ

போக்குவரத்து இல்லாத பகுதிகளில்கூட
போர்களால் போக்குவரத்து அதிகம்தான்
இமய மலையின் தொடர்ச்சியில் இருப்பதால்தான்
எங்கள் இமை கூட உறங்க மறுக்கிறது பயத்தில்

மலைப்பாங்கான நில அமைப்பில் கூட
மழலைகள் சுதந்திரமாய் விளையாட இடமில்லையா
காஷ்மீர் புவியின் சொர்க்கம்தான் இருந்தும்
வாழும் எங்களுக்கு இப்பூமியும் நரகம்தான்

நாடோடி என்பதால்தான்
ஆசிஃபாவை தெருக்கோடியில் வீசினார்கள்
முன்பு எதிரியவர் எல்லைத்தாண்டி வந்து சுட்டார்கள்
இன்று தெரிந்தவர்கள் எங்களை தேடிவந்து சுடுகிறார்கள்
ஓ இதுதான் சுதந்திரமோ

வேதனையில் தான் வாழ்கிறோம் தினம் தினம்
இதற்க்கு இடையில் சாதனை எப்படி புரிவது
சாத்தியம் இல்லாத எங்கள் வாழ்க்கையில்
சத்தியம் எங்கே போனது

காஷ்மீர் ரோஜாக்கள் சிவப்பு நிறமாய் இருப்பதற்கு
இதுதான் காரணமோ ???

BY ABCK

எழுதியவர் : (20-Jul-19, 7:53 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 67

மேலே