பயணம்

பயணம்🚲🛵🚆✈

படிப்பு சொல்லி தராததை பயணம் சொல்லி தரும்.

படிப்பு அறிவை வளர்க்கும்
பயணம் பல மனிதர்களை படிக்க உதவும்.

ஒரே இடத்தில் தேங்கினால் தண்ணீர் கூட கெட்டு விடும்
மானுடமும் ஒரே இடத்தில் இருந்து விட்டால்
மனம் குறுகிவிடும்
அறிவு குன்றிவிடும்.

வரலாறு சொல்வது
ஞானிகள் ஒரே இடம்
தங்கியது இல்லை
அறிஞர்களும் ஒரே இடம் தங்கியது இல்லை
ஞானிகளால் பல தத்துவம் உதித்தது
அறிஞர்களால் பல சமுதாய முன்னேற்றம் ஏற்றபட்டது.

கொலம்பஸ் பயணக்கவில்லை என்றால் அமெரிக்கா உலகம் முழுவதும் தெரிந்திருக்குமா?
வாஸ்கோடகாமா பயணிக்கவில்லை என்றால் கடல் வழி இந்தியருக்கு தெரிந்துயிருக்குமா?

பயணம் பல வகைப்படும்
உல்லாச பயணம்
ஆன்மீக பயணம்
ஆராய்ச்சி பயணம்
எதுவாக இருந்தாலும்
பயணம் பயன் மட்டுமா தரும், இல்லை
பயணம் மானுட வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்.

பணம் இல்லை எப்படி
பயணம் செய்வது
பறவைகளுக்கு ஏது பணம்
கண்டம் விட்டு கண்டம் வரவில்லையா
பணம், எண்ணம் இருந்தால் தானாக வரும்.
மனம் இருந்தால் மார்கம் உண்டு.
பயணிப்போம், பயன் அடைவோம்.

- பாலு.

எழுதியவர் : பாலு (20-Jul-19, 9:10 pm)
சேர்த்தது : balu
Tanglish : payanam
பார்வை : 156

மேலே