அழகி

'அழகி'

ஒரு சேலை கட்டிய நிலவைப் பார்த்தேன்
அவள் நெற்றி நிறைய குங்குமம்
தூக்கிச் செருகிய கூந்தலில் மல்லிகை மாலை
சாயம் பூசாது சிவந்திருந்த இதழில் புன்னகை
ஆண்மையே நாணும் கம்பீரமான நிமிர்ந்த நடை
பெண்மையே பிச்சை கேட்கும் நளினம் அவள் குரலில்
அழகன் முருகனுக்கே வாழ்க்கைப்பட்டது போல் அவள் கண்களில் நிறைவு
வயிற்று பசிக்காய் கையேந்தி நிற்கின்றாள் திருச்செந்தூர் வீதியிலே திருநங்கையாய்!

~ நியதி ~

எழுதியவர் : நியதி (20-Jul-19, 9:31 pm)
Tanglish : azhagi
பார்வை : 197

மேலே