கவிஞர் கண்ணதாசன்

தினம் ஒரு கவிதை.

கவிஞர் கண்ணதாசன்

ரசனையின் முழு உருவம் நீ
மானுட ரசனையை அறிந்தவன் நீ

நீ உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் கவிதை
நீ உரை நடை எழுதினால் அது காவியம்

கன்னியர்க்கும் காளையர்க்கும் காதல் பாடல் எழுதினாய்
மூத்த குடிக்கு தத்துவ பாடல் எழுதினாய்

சொல்லாட்சி உன் பாடலில் வரம்
ஆகவே நிரந்தரமாக பிடித்தோம் உன் கரம்

கம்பனிடம் கற்றாயோ
வள்ளுவனிடம் படித்தாயோ
பாரதியிடம் பயின்றாயோ
பட்டினத்தாரிடம் உணர்ந்தாயோ
அது முக்கியம் அல்ல
அள்ள, அள்ள கொடுத்தாய் தேன் சொட்டும் பாடல்கள்
இனிக்க, இனிக்க சுவைத்தோம்
இனியும் சுவைப்போம்.

அருவியன கொட்டுமாம் உன் நாவில் இருத்து கவிதை
அது பாடல் என்னும் ஆறாக
மானுடம் என்னும் சமுத்திரத்தில்
நிரந்தரமாக கலந்துவிட்டது.
-பாலு.

எழுதியவர் : பாலு (21-Jul-19, 1:06 pm)
சேர்த்தது : balu
பார்வை : 199

மேலே