எது புண்ணியம் எது பாவம்

புண்ணியங்கள் பல செய்தேன் கண்ணை திறக்கவில்லை என்பவன் பாவங்கள் எதுவென்றே புரியாமல் பரிதவிக்கும் நிலையில் எது பாவம் ?எது புண்ணியம் ? . புலிக்கு மானும் பூனை க்கு எலியும் பாம்பிற்கு தவளையும் உணவாகிறது அது பாவம் இல்லையா? பாவம் எனில் அதற்கு ருசியான உணவே அது வென்று ஆன பின்புயாருக்கு பாவம் ?மிருகத்தின் தர்மம் வேறு ;மனிதனின் தர்மம் வேறு. ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை அனைத்தும் உணர்வாலே வாழ்கிற போது ஆறறிவு படைத்த மனிதன் அறிவாலும் வாழ வேண்டாமா ?அதர்மத்தை மனித தர்மம் ஏற்குமா ?ஏற்கலாமா? தத்துவத்தை உயிர் மூலத்தை உணருமா மிருகங்கள்? உணர்வது மனிதனின் அறிவை பொருத்து. மனிதன் உணர்ந்து உணர்ந்து புரிந்தால் எது பாவம் எது புண்ணியம் என்று புரியாமல் போகுமா ?வாழ்வு வீணாகுமா?இறைவனின் நோக்கத்திற்கு சாதகமாக இருப்பது புண்ணியம் பாதகமாக இருப்பது பாவம் எனில் இறைவனின் நோக்கம் என்ன ?நோக்கத்தை புரிந்து கொள்ள சைவசித்தாந்தம் நம் கண்ணை திறக்கிறது. கவனமாக பார்ப்போமா ?நில் மனிதா! எனது கேள்விகளுக்கு பதில் தா உன் மன சந்தேகம் தீரும் கேள்வி. உன் கேள்விக்கு நானே பதில் சொல்கிறேன் உன்னை படைத்தது யார் ? இறைவன் .இறைவன் உன் உயிரை படைத்தானா? உடலைப்படைத்தானா?தான் ஒன்றை படைத்தால் அந்த ஒன்றை அவனால் அழிக்க முடியுமா ?புரியவில்லை யா? நீ ஒரு வீட்டை ஒரு பானையை ஒரு பொருளை ஏதோ ஒன்றை படைக்கிறாய் அதை உன்னால் அழிக்க முடியுமா ? முடியும் .உயிர் அழியுமா? அழியாது .சரியாகச் சொல் உயிர் அழியுமா அழியாதா ?அழியாது . உயிரை இறைவன் படைத்து இருந்தால் அந்த உயிர் இறைவனால் அழிக்க முடியுமா முடியாதா? முடியும். அப்படியானால் உயிர் அழியாது என்றால் இறைவன் படைக்கவில்லை என்று பொருள் உடல் அழியும் . அப்படி எனில் அது இறைவனால் படைக்கப்பட்டது என ஒப்புக் கொள்ளலாம் இல்லை யா?அது இயற்கையால் படைக்கப்பட்ட து என ஏன்ஏற்றுக்கொள்ளக்கூடாது ?தாராளமாக ஏற்றுக் கொள் .ஏனெனில் இயற்கையே இறைவன் இயற்கை எதிலும் இறைவன் காண்பவன் ஞானி . பாரதி சொல்வான். காக்கைச் சிறகினிலே
நந்தலாலா நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா . நிறங்களும் மரங்களும் இறைவனே . இடியும் ஓசையும் மின்னலும் ஒளியும் இறைவனேகீதம் என பறவையின் இசை குரலும் இறைவனே. ஏன் சுடும் தீ கூட உன்னை தொடும் இன்பம் என்கிறான் இதைப் புரிந்தவன் ஞானி ஆகிறான் சரி விஷயத்திற்கு வருவோம் படைக்கப்பட்ட உடல் அழிகிறது உயிர் யாராலும் அழிக்க முடியாது அது யாராலும் படைக்கப்படவில்லை அப்படியானால் உயிர் எங்கிருந்து வந்தது அது அனாதி மூலம் தெரியாது முடிவும் புரியாது. காற்று எங்கிருந்து உருவானது? பூமி எப்படி உருண்டையானது? மற்ற கிரகங்கள் எப்படி உருவாகின? அது சூரியனிலிருந்து எரிந்து விழுந்து வந்ததாக விஞ்ஞானம் சொல்லுகிறது அதே போலத் தான் தானாக தோன்றிய இயற்கை இது அனாதி இறைவன் என்பவன் கல்யாண குணங்களைக் கொண்டவன் இறைவனைப் பற்றி சுவாமி சூரியானந்தர் சொல்வதைக் கேளுங்கள். அவன் பெரும் கருணை மிக்கவன். இரக்கமற்றவன் இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டவன் .சிறந்த குணம் உடையவன் மிக மோசமான குணம் கொண்டவன் இதில் அவனுக்கு எந்த குணமும் இல்லாதவன் .எல்லையற்றவன் முடிவில்லாதவன் வரம்பில்லாத அவனுக்கு எல்லாமே சாத்தியம் பாசம் பற்று சுகம் துக்கம் எதுவும் இல்லாதவன் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவனாக எப்படி இருப்பது புரியவில்லை . நெருப்பு சுடும் . நெருப்பு அனைத்தையும் பஸ்பம் ஆக்குகிறது ஆம் நெருப்பு அதற்கு சுடுவதில்லை .நெருப்பு தன்னையே பஸ்மமாக்கி கொள்வதில்லை அது போலத் தான் இறைவன் திருவிளையாடல் புரிவதால் அதனால் அவருக்கு என்ன லாபம் எதுவும் இல்லை சாலையில் நீ நடந்து போய்க் கொண்டிருக்கிறாய் மனிதன் மயங்கி கிடக்கிறான் என்ன செய்வான்?அவனது மயக்கத்தை தெளிய வைத்து அவனை விழிப்படைய செய்வாய். ஏன் ?அவன் மயங்கிய நிலையில் இருக்கும்போது செயல்படுவதில்லை அவன் செயல்பட வேண்டும் செயல்பட்டால்தான் அனுபவம் பெற முடியும் உயிரும் ஆணவமலம் கன்ம மலம் மாயமலம். என்ற மும்மலங்களில் மயங்கி கிடக்கிறது அதை அனுபவித்து செயல்பட்டு புரிந்துகொண்டால்தான் அதிலிருந்து விடுபட முடியும் அதனால் தான் அனுபவம் ஒன்றுதான் ஒரு மனிதனை ஞானியாக்கமுடியும் . கண்ணதாசன் சொல்லுகிறார். பிறப்பால் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான். படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் . அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான் அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் அளித்துப் பாரென இறைவன் பணித்தான் . பாசம் என்பது யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான் . மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் மணந்து பாரென இறைவன் பணித்தான் . பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான். முதுமை என்பது யாதெனக் கேட்டேன் முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான் . வறுமை என்பது என்னெனக் கேட்டேன் வாடிப் பாரென இறைவன் பணித்தான் . இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் இறந்து பாரென இறைவன் பணித்தான் . அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் ஆண்டவனே நீ எதற்கு என கேட்டேன் . ஆண்டவன் சற்றே அருகே வந்து அனுபவம் என்பதே நான்தான் என்றான். அந்த அனுபவம் எல்லா உயிர்களுக்கும் கிடைக்க வேண்டும் அந்த அனுபவத்தை தடை செய்தால் அது பாவம் அனைத்து உயிர்களும் அனுபவம் பெற துணை நின்றால் அது புண்ணியம் நீ செய்யும் எந்த ஒன்றும் இறைவனின் நோக்கத்திற்கு சாதகமாக இருந்தால் அது புண்ணியம் ஆகிறது பாதகமாக இருந்தால் அது பாவம் ஆகிறது புரிந்து கொள்வோம் வாழ்ந்து விடுவோம் வாழ்க்கை வாழ்வதற்கே

எழுதியவர் : கவிஞர் சு. இராமஜோதி (21-Jul-19, 4:18 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 145

மேலே