பாடுகளால் உடல் சோர்ந்து

பிணிப் போக்குமோ என் வேண்டுதல்
கணிக்கச் செய்யுமோ என் மந்திரம்
பேராற்றல் பெற்ற விண்ணுலகு
பிசிறடிக்கும் மழை மேகத்தை சுமப்பதைப் போல்

குருதியோடும் என் நெஞ்சத்து எண்ணத்தை
குவிக்கச் செய்து குன்றேற்றுமோ அல்லது
குருதி உறைய உயிர் அதிர யாதேனும்
குறைவந்து பற்றி குறைந்து விடுமோ

எவையும் யாரும் உதவிக்கரம் நீட்டா நிலையில்
ஏதோ ஒரு ஆற்றல் ஆட்கொள்ளட்டும் என்று
எவற்றையோ எண்ணி மனதை ஏற்றம் செய்ய
என் அறிவு இடும் பணியை ஏற்கின்றேன்

பாடுகளால் உடல் சோர்ந்து அயர
பாட்டுக்கேற்ற பலனது கிடைக்கா நிலையில்
பாடுச் சுட்டியவனை மனம் தூற்றுமோ அன்று
பரமசாதுவாய் மாறி பணிக்காகப் போற்றுமோ

இயன்றதை மட்டுமே மனம் இசைக்கின்றது
இயலாததைப் பற்றி வெல்ல மறுக்கின்றது
இந்நிலையால் மனம் கட்டுண்டால் எங்ஙனம்
இனிய வாழ்க்கை நம்மை பற்றி குதுகலிக்கும்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Jul-19, 6:26 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 112

மேலே