சூழல் மறக்க

சுள்ளென வெய்யிலும்

பசுமையான வயல்
வெளியும்

வெய்யிலுக்கு இதமாய்
மரநிழலும்

சில்லென்று வீசும்
காற்றும்

சாய்ந்திருக்க கயிற்றுக்
கட்டிலும்

அருகில் மெத்தென்ற
உன் நெருக்கமும்

செல்லக் கொஞ்சலாய்
சின்னக் கிள்ளலும்

தருகின்ற கிரக்கம்
மொத்தமாய் என்னை

சூழல் மறக்க செய்யுதடி!

எழுதியவர் : நா.சேகர் (21-Jul-19, 11:40 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 62

மேலே