தேநீர்ப் பொழுதுகள்

119 - "" தேநீர்ப் பொழுதுகள் ""
கவிதைமணி - நன்றி

""தேநீர்ப் பொழுதுகள் ""
கவிதைமணி - நன்றி

மழலை க்கூட்ட தாயிடத்து அங்கப்பால் 
அற்றுப் போகலாம் ஒரு காலமும் தான் 
பெற்ற பிள்ளை மேல் பாசமற்று போகா 
அவள் எதற்கு முத வாதவ ளாயினும் 
°°°
அவனருகினில் நான் இல்லாமல் போனாலும் என்றன் நினைவினில் இல்லாமல் இல்லை என்றே யவன் உணர்வானோ உணர மாட்டானோ காதலுக்கு அவமரியாதை யாகிடுமோ 
°°°
அந்த தேநீர்ப் பொழுதுகள் எந்தனுக் காய் காத்திருக்கும் குடுவைத் தேநீரின் கொதிப்பு குறையுதங்கே எந்தன் வரவுக்காய் காத்திருப்போ னென் காதலன் கொதிப்பு கூடிடுதேயங்கே 
°°°
மாலையில் சாலையில் தாமதம்
குறுக்கும் நெடுக்குமாய் வாகனங்கள்
வழிவிடாத இக்கட்டான வேளையில் 
மனமுடைந்து போவானோ காதலன்
என்பதுவோ என்றன தொரே கவலை
°°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கம் 

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (23-Jul-19, 12:57 pm)
பார்வை : 62

மேலே