எவ் வழியே நான் வர

சோளம் கொட்டப் பல் அழகி/
சுண்டி இழுக்கும் சொல்லழகி/
கிரமத்துக் கறுப்பழகி/
தொட்டுப் பார்க்கத் தூண்டும்/
குண்டு மாங்காய் மார்பழகி/
ரோஜா ஒன்று தரவா ?
உன் சோடியாகவே வரவா?

குண்டுமணி விழியழகி /
குற்றால அருவி போல் சிரிப்பழகி/
சிலிப்பூட்டும் பேச்சழகி/
திகைப்பூட்டும் பேரழகி /
சீண்டிப் பார்த்திடவா ?
சிலுக்குவார்ப் பட்டிக்கு மாப்பிள்ளையாகிடவா?

கொய்யாக் கொண்டையழகி/
சேற்றில் நாத்து நடையிலே கெண்டழகி/
வளைந்தாடும் இடுப்பழகி/
வலை போட்டு பிடிக்கும் அகத்தழகி/
வாசல் படியேறி நான் வரவா ?
கொல்லைப்புறமாய் கள்வனைப்
போல் வரவா ?

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (23-Jul-19, 5:00 pm)
பார்வை : 204

மேலே