மல்லிக்கொடியும், பூங்கோதை இவளும்

அதிகாலை வேளை மலர்க்கொடி இவள் பூங்கோதை,
மதுவன ராதிகா போல மலர்வனம் நோக்கி
போகிறாள், சோலையில் குயிலினங்கள் பாட
இவள் ஓர் மல்லிக்கொடியை நாடி போகின்றாள்
கொடியெல்லாம் மல்லிமொட்டு இன்னும் இதழ்கள்
விரித்து பூக்காது இவள் வருகைக்கு காத்துநின்றனவோ
பூவை இவள் மலர்க்கொடியாய் மல்லிக்கொடிமீது
சாய்ந்திட , இது என்ன நம் கொடிதானோ என்றெண்ணி
மல்லிக்கொடி என்று எண்ணி , இவள் இதழ்கள் அலர்ந்து சிரிக்க
முல்லைப்பூ பூத்ததோவென சிரிக்க , மல்லிமொட்டெல்லாம்
கொடியில் ஒரு நொடியில் இதழ்கள் விரித்து
அலர்ந்து குலுங்க, மங்கை இவள் மகிழ்ந்து
பூவெல்லாம் பறித்து பூக்கூடையில் இட்டாள்
மையிலாய் ஆடி நடைபோட்டால் இல்லம் நோக்கி .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Jul-19, 5:19 pm)
பார்வை : 59

மேலே