சிரித்து வாழ்

நிலமும் வாழ்வும் செழித்திருந்தால்
நிம்மதி தானே வந்துவிடும்,
நிலைமை யறிந்தே ஆசைகொண்டால்
நீடித் திருக்கும் மனவமைதி,
அலையும் மனதை யடக்கிவைத்தால்
ஆசை கொணரும் இடரிலையே,
விலையிலா வாழ்வில் கற்றுக்கொள்
வறுமை வரினும் சிரித்திடவே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (23-Jul-19, 7:24 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : siriththu vaal
பார்வை : 103

மேலே