மஞ்சள் நிறத்தாள்

எலுமிச்சை
அவளின் நிறத்தை மேலோடு
வியந்து பார்த்து நின்றது

அவளோடு அழகாக
தோளோடு சேர்த்து நின்றது
அவளுக்கு மாலையாக
தன்னை நூலோடு
கோர்த்து நின்றது

அவளிடம் தோற்றத்தில் தோற்று நின்றது
தோற்றதில் வேர்த்து
நின்றது

எலுமிச்சை அவள்
நிறத்திடம்
எடுத்தது பிச்சை

அவள் மண்ணுள்
விளையாது ஒரு
பெண்ணுள் விளைந்த
மஞ்சள்

ஜல் ஜல் என
நடக்கும்
மஞ்சள்

இவள் வீட்டிற்குள்
செல்லும்வரை
இவளின் ஊருக்குள்
இரவு வருவதில்லை
இவளிடம் இருந்து வரும்
ஒளியால்

இவள் ரம்பை ஊர்வசியின்
அழகிற்குக் கூட அஞ்சி
ஒளியாள்

குயிலெல்லாம்
வாய்மூடி பறந்தது
இவள் பேசும்
ஒலியால்

இவளின் வீடு
கட்டப்பட்டது
கிளியால்

உடல்வாகில்
மெலியாள்

கண்டேன் இவளை
காலத்தின் கலியால்

நெஞ்சுரத்தில்
இவள்
வலியாள்

நான் மட்டும்
துடிக்கிறேன்
இவள் பேசாத
வலியால்

எழுதியவர் : புதுவைக் குமார் (23-Jul-19, 10:14 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 133

மேலே